மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நாளை, சேவையே முதலில் புதுமைக் கண்டுபிடிப்பு சவால் என்னும் திட்டத்தை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 4:16PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நாளை சேவையே முதலில் புதுமைக் கண்டுபிடிப்பு சவால் என்னும் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டம் இளைஞர்களை தங்கள் சமூகங்களில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறியவும், அவற்றை ஆய்வு செய்து மேம்படுத்தி, நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடியத் தீர்வுகளை உருவாக்கவும் ஊக்குவிக்கும். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அந்தமான் – நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த முன்முயற்சி செயல்படுத்தப்படும்.

இந்த முன்முயற்சி, பள்ளி, தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த இளையோரை ஒருங்கிணைக்கும்.

இந்நிகழ்வில் பங்கேற்க 2026 செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 24 வரை பதிவு செய்யலாம். தேசிய அளவிலான இறுதி சுற்றுப் போட்டி தில்லியில் டிசம்பர் 10 முதல் 17 வரை நடைபெறும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314396&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2314544) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Kannada , Malayalam