பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 2:25PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த காண்டாமிருகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒற்றைக் கொம்பு காண்டாமிருங்களைப் பாதுகாப்பதில் உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும், அந்த இனங்களுக்கான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அதன் எதிர்காலத்திற்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். அரசின் முயற்சிகள் எவ்வாறு காண்டாமிருகங்களைப் பாதுகாக்கின்றன என்பதை இக்கட்டுரை எடுத்துரைப்பதாகவும், இது அவசியம் படிக்க வேண்டிய ஒன்று என்றும் திரு மோடி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த காண்டாமிருகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது."

காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒற்றைக் கொம்பு காண்டாமிருங்களைப் பாதுகாப்பதில் உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அந்த இனங்களுக்கான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது அதன் எதிர்காலத்திற்கு முக்கியம்.

அரசின் முயற்சிகள் எவ்வாறு அதைப் பாதுகாக்கும் பயணத்தை வலுப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டு மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள இக்கட்டுரை அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.

***

(Release ID: 2313851)

SS/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314137) வருகையாளர் எண்ணிக்கை : 8