நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாடிக்கையாளர்களின் வசதிக்காக செப்டம்பர் 27, ஞாயிறு அன்று வங்கிகள் செயல்படும்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 12:54PM by PIB Chennai

ஒருங்கிணைந்த வங்கிச் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ள மூன்று நாள் வேலைநிறுத்தம் வார இறுதி விடுமுறை நாட்களான செப்டம்பர் 26,27 ஆகிய தேதிகளுடன் தொடர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கான வங்கிச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும், மண்டல கிராமப்புற வங்கிகளும் 2026 செப்டம்பர் 27, ஞாயிறு அன்று செயல்படும். 

2026 செப்டம்பர் 27 அன்று அனைத்து வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் கிளைகள் ஆகியவை முழுமையாக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களின் நலனும், வசதியும் அரசின் முதன்மையான முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்குமாறு அரசும் வங்கி நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அத்தியாவசிய வங்கி சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313778&reg=3&lang=1

***

SS/IR/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2313950) வருகையாளர் எண்ணிக்கை : 13