குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 72- வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் : திரு அனந்த் நாக்-குக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிப்பு

இந்திய சினிமா, மக்களின் கனவுகள், மரபுகள், போராட்டங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 9:12PM by PIB Chennai

இன்று (செப்டம்பர் 22, 2026) குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் நடைபெற்ற விழாவில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். மூத்த நடிகர் திரு ஆனந்த் நாக் இந்திய சினிமாவுக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி வழங்கி கௌரவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தங்களின் அபாரத் திறமையாலும் கடின உழைப்பாலும் தேசிய அளவில் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த விருதாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திரு அனந்த் நாக்-குக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் வருங்கால தலைமுறைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று குடியரசு தலைவர் கூறினார்.

 

அனைத்து மொழிகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள திரைப்படங்களில் இந்தியாவின் பிம்பம் பிரதிபலிக்கிறது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்திய சினிமா, இந்திய மக்களின் கனவுகள், மரபுகள், போராட்டங்கள், எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். சிறந்த திரைப்படங்களைக் கௌரவிக்கும் விழா, ஒற்றுமைச் சிலையின் வளாகத்தில் நடைபெறுவதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நாட்டின் கலாச்சார ஒற்றுமையைக் கொண்டாடும் இந்த விழாவை, இந்தியாவின் ஒற்றுமையின் சிற்பியான சர்தார் வல்லபாய் பட்டேலே நேரில் ஆசீர்வதிப்பது போல இந்த நிகழ்வு தோன்றுவதாக அவர் கூறினார்.

 

விருது பெற்ற அனைத்துப் படங்களையும் குடியரசுத் தலைவர் பாராட்டினார். சமூகம், தேசம் தொடர்பான முக்கியப் பிரச்சினைகளைக் கையாளும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்ததற்காக நடுவர் குழுவினரை அவர் பாராட்டினார். ஒவ்வொரு பிராந்திய நடுவர் குழுவிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எந்தவொரு துறையிலும், பெண்களின் கண்ணோட்டத்தை இணைப்பதன் மூலம் ஒரு முழுமையான மனிதப் பார்வையை உருவாக்க முடியும் என்பதை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சுட்டிக் காட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313663&reg=3&lang=1

(Release ID : 2313663)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313676) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Kannada