மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
செமிகான் இந்தியா 2026 நிகழ்வு நாட்டின் செமிகண்டக்டர் சூழலை விளக்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 12:10PM by PIB Chennai
நாட்டின் செமிகண்டக்டர் சூழலை விளக்கும் வகையில் செமிகான் இந்தியா 2026-ன் 5-வது பகுதி புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் 2026 செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. சிப் வடிவமைப்பு, மேம்பட்ட பேக்கேஜிங் முதல் மூலப்பொருட்கள் உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு, உயர் செயல்திறன் கொண்ட கணினி வரை செமிகான் இந்தியா 2026 நிகழ்வு, செமிகண்டக்டர் சூழலின் பல்வேறு பகுதிகளை ஒரே அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்தது.
இதில் தொழில்துறைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உலகளாவிய செமிகண்டக்டர் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கண்காட்சிகள், புத்தொழில் அரங்கம், பணியாளர் மேம்பாட்டு அரங்கம், மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள், ஹேக்கத்தான் ஆகியவை இடம்பெற்றன.
இந்தியாவின் செமிகண்டக்டர் பயணம் சிப் வடிவமைப்பு மட்டுமின்றி உற்பத்தி, பேக்கேஜிங், ஆராய்ச்சி, மூலப்பொருட்கள், திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த சூழலை நோக்கி எவ்வாறு விரிவடைகிறது என்பதை இக்கண்காட்சி விளக்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313324®=3&lang=1
***
SS/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313526)
வருகையாளர் எண்ணிக்கை : 6