ரெயில்வே அமைச்சகம்
தூய்மைப் பராமரிப்பு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக சிறப்புத் தூய்மை இயக்கத்திற்கான ஆயத்தப் பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 1:32PM by PIB Chennai
அரசு அலுவலகங்களில், தூய்மைப் பணிகளை ஒரு நிரந்தர நடைமுறையாக மாற்றுவதற்கும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்குமான சிறப்புத் தூய்மை இயக்கம் 6-ஐ மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இலக்குகளை நிர்ணயிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது (2026 செப்டம்பர் 15 முதல் 30 வரை). இரண்டாவது கட்டமாக, அதனைச் செயல்படுத்துவது ம்(2026 அக்டோபர் 2 முதல் 31 வரை).
முந்தைய சிறப்புத் தூய்மை இயக்கத்தின் போது, பொதுமக்களின் குறைகள், முக்கியப் பிரமுகர்களின் பரிந்துரைகள், பிற நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்தல் தொடர்பான இலக்குகளில், 100 சதவீத இலக்கை எட்டி, ரயில்வே அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. 6.06 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தை விடுவித்ததுடன், ரூ 570 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312915®=3&lang=1
----
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313027)
வருகையாளர் எண்ணிக்கை : 7