உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழுத் தலைவர்களின் மாநாட்டை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 12:53PM by PIB Chennai

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழுத் தலைவர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டை மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் 2026 செப்டம்பர் 22 அன்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் எதிர்ப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  தொலைக்காட்சி விளம்பரத்தையும் திரு அமித் ஷா வெளியிட்டு லக்னோ, டேராடூனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் புதிய வளாகங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிகழ்வில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவிற்கு பாராட்டு தெரிவிக்கப்படுவதோடு மேம்படுத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் இணையதளமும் தொடங்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழுவின் தலைவர்கள், தொடர்புடைய அரசுத்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படியும் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312888&reg=3&lang=1

***

TV/IR/PS/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2312953) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada