எரிசக்தி அமைச்சகம்
தேசத்தின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான, நம்பகமான எரிசக்தி அவசியம்: ஜி20 எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 11:43AM by PIB Chennai
ஜி20 எரிசக்தி அமைச்சர் கூட்டம் செப்டம்பர் 14 முதல் 16 வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால், பாதுகாப்பான கனிம விநியோகச் சங்கிலிகளின் ஆதரவுடன், உறுதியான எதிர்காலத்துக்கு தயாராக இருக்கும் எரிசக்தி அமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை தெரிவித்தார். வளரும் பொருளாதாரத்துக்கு பாதுகாப்பான, மலிவான மற்றும் நம்பகமான எரிசக்தி வளர்ச்சி அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் மயமான, நுகர்வோர் மைய எரிசக்தி அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதையும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார். போட்டியை ஊக்குவிக்க, எரிசக்தித் துறையில் முதலீட்டை எளிதாக்க, இந்தியா மேற்கொண்ட சீர்திருத்தங்களையும் அவர் பட்டியலிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311202®=3&lang=1
***
TV/MM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312177)
வருகையாளர் எண்ணிக்கை : 12