நிதி அமைச்சகம்
வருவாய் புலனாய்வுத் துறையினர் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதடைகளின்போது ரூ.62 கோடி மதிப்புள்ள 41 கிலோ தங்கம் பறிமுதல்: மூன்று வெளிநாட்டினர் உட்பட 24 பேர் கைது
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 5:30PM by PIB Chennai
தங்கக் கடத்தலுக்கு எதிரான தனது தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், கடந்த சில நாட்களில் ஆறு நடவடிக்கைகளில், சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டிலிருந்து வந்த ஏறத்தாழ 41 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக, மூன்று வெளிநாட்டினர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விமான நிலையங்கள், ரயில்கள், இந்திய-வங்கதேச எல்லை வழியாகச் செய்யப்படும் கடத்தல்கள் ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
தில்லியில் நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், வெளிநாட்டுத் தங்கத்தைக் கொள்முதல் செய்து அதனை மாற்றும் செயலில் ஈடுபட்ட ஒரு நபருடன் தொடர்புடைய இடங்களில், அதிகாரிகள் 07.09.2026 அன்று ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தினர். அப்போது 10.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்
08.09.2026 அன்று தில்லியில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், பஞ்சாபிலிருந்து வந்த ஒரு வாகனத்தை டிஆர்ஐ அதிகாரிகள் இடைமறித்து, 1.21 கிலோ தங்கம், சுமார் ரூ. 43.50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை மீட்டுப் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, 05, 06-ம் தேதிகளில், இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள ஹால்டர்பாரா எல்லை சோதனைச் சாவடிக்கு அருகே ஒரு நபரிடமிருந்து, சுமார் 11.3 கிலோ எடையுள்ள 89 வெளிநாட்டுத் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் 03, 04 தேதிகளில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 4.6 கிலோ எடையுள்ள நான்கு வெளிநாட்டுத் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.
வருவாய் புலனாய்வுத் துறையினரின் தொடர் நடவடிக்கைகள் தங்கக் கடத்தல் கட்டமைப்புகளைத் தொடர்ந்து தகர்த்து, நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படுவதைத் தடுத்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308801®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310838)
வருகையாளர் எண்ணிக்கை : 30