ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மகளிருக்கான ஓய்வூதியப் பாதுகாப்பு அம்சங்களை முன்னெடுத்துள்ள மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 8:54AM by PIB Chennai

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான விழிப்புணர்வு, ஓய்வூதியப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய ஊரக வளர்ச்சித்துறை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் இடையே 2026-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதியன்று கையெழுத்தானது. மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக செயலாளர் ரோகித் கன்சால் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஊரகப் பகுதிப் பெண்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள், பதிவு செய்யும் முறை, ஓய்வூதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை பயனடைய செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதுகுறித்து பேசிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக செயலாளர் ரோஹித் கன்சால், பெண்களுக்கு  சமூக பாதுகாப்பு மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பயனடையும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார். இல்லத்தரசிகள், சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும், உண்மைத்தன்மையுடனும் ஓய்வூதிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.     

ஊரக பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொருளாதார ரீதியாக நாட்டிற்கு தங்களது பங்களிப்பை செய்த போதிலும், அவர்களால் ஓய்வூதியம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாத நிலையில், இத்திட்டம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் வருமானத்தை முறைப்படுத்தி, அவர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310300&reg=48&lang=1

 

***

TV/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2310417) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Kannada , Malayalam