வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் இடையே அந்தந்த நாடுகளின் நாணய அடிப்படையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 12:10PM by PIB Chennai

உலக அளவிலான வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு அளவை பிரிக்ஸ் உறுப்பு மற்றும் நட்பு நாடுகள் கொண்டிருப்பதால் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய சம அளவிலாள வர்த்தக ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பை பரஸ்பரம் உறுதி செய்வதுடன் ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிமைபடுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உறுப்பு நாடுகளுக்கு இடையோன வர்த்தக ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் நாடுகளிடையேயான வர்த்தகத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் பொறியியல் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். எந்தவொரு நாட்டுடனான வர்த்தகம் அதன் வளர்ச்சிக்கும் மக்களின் நலவாழ்விற்கும் ஒரு தடையாக இருக்க கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

உறுப்பு நாடுகளிடையேயான சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எளிமையான, சுமூகமான சந்தை வாய்ப்புக்களை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உணவு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேளாண் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில் வேளாண் சார்ந்த சவால்களுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார். வேளாண் தொழில்நுட்பத்தில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரிக்ஸ் நாடுகளிடையேயான வர்த்தகத்தை அந்தந்த நாடுகளில் நாணயங்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309049&reg=3&lang=1

****

TV/SV/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309319) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada , Malayalam