உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் மூன்றாவது கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 6:09PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் மூன்றாவது கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இதில் மத்திய உள்துறைச் செயலாளர், தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் துறைத் தலைவர், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைச் செயலாளர், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் இயக்குநர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறை, செயல்முறை ஆகிய இரண்டிலும் ஒரு முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசு, ஒட்டுமொத்த பேரிடர் மேலாண்மை அமைப்புமுறையையும் முழுமையாக மாற்றியமைத்து, 'உயிரிழப்பு இல்லா நிலை' என்ற இலக்கை நிர்ணயித்து, அதை அடையும் திசையில் நாட்டை வழிநடத்திச் சென்றுள்ளது. இன்று, இடர் குறைப்பு, முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புமுறைகள் மற்றும் ‘உயிரிழப்பு இல்லா நிலை’ ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சகாப்தத்தில் நாம் நுழைந்துள்ளோம். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒரு விஷயமாகும். இந்தத் திசையில், ‘முழுமையான அரசு’ அணுகுமுறை, நமது பணி கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடர் குறைப்பு, மீள்திறன் மற்றும் ஒரு பரந்த தேசிய தொலைநோக்குப் பார்வை ஆகியவை இந்தியாவை உலகிற்கான ஒரு முன்மாதிரியாக உருவெடுக்கச் செய்கின்றன. லைஃப் இயக்கம் என்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு போன்ற முன்முயற்சிகள் பேரிடர் தடுப்பிற்கு ஒரு முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றன. பேரிடர் நிகழும்போது மட்டுமல்லாமல் அவை ஏற்படுவதைத் தடுப்பதன் மூலமும் 'உயிரிழப்பு இல்லா நிலையை' அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308822®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308939)
வருகையாளர் எண்ணிக்கை : 9