விவசாயத்துறை அமைச்சகம்
மலேசியா, திமோர்-லெஸ்தே, மியான்மர் நாடுகளுடன் வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் விவாதித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 11:04AM by PIB Chennai
மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், மலேசிய வேளாண், உணவுப்பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு முகமது பின் சாபு ஆகியோரிடையேயான சந்திப்பு புதுதில்லியில் 2026 செப்டம்பர் 9 அன்று நடைபெற்றது. வேளாண் மற்றும் வனம் குறித்த 9-வது ஆசியான் - இந்தியா அமைச்சர்கள் நிலையிலானக் கூட்டத்திற்கிடையே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வேளாண், அது சார்ந்த துறைகளில் இந்தியா – மலேசியா இடையேயான நெருக்கமான, வலுவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மரபணு மூலப்பொருள் பரிமாற்றம், வர்த்தகம், சந்தை அணுகல் குறித்த இருதரப்பு விவகாரங்களைப் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் கையாள முடியும் என்று இருநாட்டு அமைச்சர்களும் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து திமோர்-லெஸ்தே நாட்டின் வேளாண் துறை அமைச்சர் திரு மார்கோஸ் டா குரூஸ்உடன் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் கலந்துரையாடினார்.
வேளாண் துறையிலுள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கும், நாட்டின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இருதரப்பினருக்குமிடையே வலுவான முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று திமோர்-லெஸ்தே அமைச்சர் விருப்பம் தெரிவித்தார்.
பின்னர், மியான்மர் நாட்டின் வேளாண் துறை அமைச்சர் திரு மின் நௌங், மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. வேளாண், அது தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர்கள் அப்போது தெரிவித்தனர்.
பரஸ்பரம், அடையாம் காணப்பட்ட துறைகளில் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பு, பருப்பு வகைகள், பருத்தி, பால்வள மேம்பாடு, வேளாண் கல்வி போன்ற வேளாண் சார்ந்த அம்சங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க உதவுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308585®=3&lang=1
***
SS/IR/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2308619)
வருகையாளர் எண்ணிக்கை : 11