சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை முறையாக சென்றடைவதை கண்காணிக்கும் மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 2:22PM by PIB Chennai

பட்டியலின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில், மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகம் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1 முதல் 10ம் வகுப்பு வரையிலும், 11ம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலும் இரண்டு பிரிவாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, மாணவர்களுக்கு முறையாக சென்றடைகிறதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. பண மோசடியை தடுக்கும் வகையில், மாணவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடி பணபரிமாற்றம் செய்யப்படுகிறது.

கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு முறையாக சென்றடைகிறதா என்பதை மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை தொடர்பான இணையதளத்தில் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடைபெற்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கள ஆய்வு, தேசிய, மண்டல, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வி தொடரும் வகையில், இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307381&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2307640) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada