விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரான்ஸ் அமைச்சர் திரு பிலிப் பாப்டிஸ்டுடன் சர்வதேச விண்வெளி உச்சிமாநாடு குறித்து ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 4:33PM by PIB Chennai

விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரான்சின் விண்வெளித் துறை அமைச்சர் பேராசிரியர் பிலிப் பாப்டிஸ்டுடன் காணொலிக் காட்சி வாயிலாக இருதரப்புப் பேச்சு நடத்தினார். இதில், மனித விண்வெளிப் பயணம், மேம்பட்ட விண்வெளித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட விண்வெளித் துறையில் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளின் விண்வெளி முகமைகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

2026 செப்டம்பர் 9, 10 தேதிகளில் பாரிஸில் நடைபெறவிருக்கும் சர்வதேச விண்வெளி உச்சிமாநாடு, 2026 செப்டம்பர் 7, 9 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் விண்வெளிக் கண்காட்சி ஆகியவை குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பாரிஸ் உச்சிமாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு, பெங்களூரு விண்வெளிக் கண்காட்சியில் பிரான்சின் பங்கேற்பு, இந்த மாத இறுதியில் பேராசிரியர் பாப்டிஸ்ட் மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பயணம் ஆகியவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

சர்வதேச விண்வெளி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கும், பிரான்சுடனான தனது நீண்டகால விண்வெளி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தியா ஆவலுடன் இருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306722&reg=3&lang=1

-----

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306798) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Telugu , Kannada , Malayalam