தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழைய திரைப்படங்களைப் பாதுகாப்பது, டிஜிட்டல் முறையில் மாற்றுவது குறித்த சிறப்புப் பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 6:15PM by PIB Chennai

புனேவில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகமும், தேசிய திரைப்பட  கழகமும்   (என்எப்டிசி-என்எப்ஏஐ) இணைந்து பழைய திரைப்படங்களைப் பாதுகாப்பது மற்றும் டிஜிட்டல் முறையில் மாற்றுவது குறித்த சிறப்புப் பயிலரங்கை நடத்தவுள்ளன.

 

இப்பயிலரங்கு  2026 அக்டோபர் 5 முதல் 15 வரை (வார விடுமுறை நாட்கள் நீங்கலாக) புனேவில் உள்ள என்எப்ஏஐ மற்றும் எப்டிஐஐ வளாகங்களில் நடைபெறவுள்ளது. திரைப்படப் பாதுகாப்பு, காப்பகம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய துறைசார் வல்லுநர்கள் இதில் பங்கேற்கலாம். பழைய திரைப்படங்களைப் பாதுகாத்தல், டிஜிட்டல் முறையில் மீட்டமைத்தல், ஆடியோ மற்றும் காகிதப் பாதுகாப்பு முறைகள், படங்களை அடையாளம் காணுதல், பழுதுபார்த்தல், சுத்தம் செய்தல், ஸ்கேனிங் மற்றும் நிறம் தீட்டுதல் போன்ற தலைப்புகளில் நேரடிப் பயிற்சியும் செயல் விளக்கங்களும் இதில் அளிக்கப்படும்.

 

மேலும், தாய்லாந்து திரைப்படக் காப்பகத்தின் செயல்முறைகள் குறித்த பிரத்யேக வகுப்பு, பாரம்பரியத் திரைப்படங்களின் திரையிடல் மற்றும் என்எப்ஏஐ , எப்டிஐஐ, பண்டார்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரிசர்வ் வங்கி காப்பகங்களுக்குக் களப் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அபர்ணா சுப்பிரமணியன் பயிற்சி இயக்குநராகச் செயல்படும் இப்பயிலரங்கில் அதிகபட்சமாக 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சிக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.12,000 ஆகும். இப்பயிலரங்கு  குறித்த கூடுதல் விவரங்களுக்கு 020-2553 0085 என்ற எண்ணிலும் அல்லது info.cfol@ftii.ac.in / fro@ftii.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306458&reg=3&lang=1

செய்திக்குறிப்பு அடையாள எண்: 2306458

****

SS/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306604) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Assamese , Kannada