பிரதமர் அலுவலகம்
சந்திரசேகர் ஆசாதின் நினைவு நாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை - அவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 9:13AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியத் தாயின் வீரமகனும், புகழ்பெற்ற புரட்சியாளருமான சந்திரசேகர் ஆசாத்தின் நினைவு நாளன்று அவருக்குத் தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
அன்னை இந்தியாவை அடிமைத்தனத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிப்பதற்காக ஆசாத் அனைத்தையும் தியாகம் செய்தார் என்றும், இதற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
அழியாத புரட்சியாளரின் மரபு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், அநீதிக்கு எதிராக உறுதியாக நிற்பதே உண்மையான வீரத்தின் சாராம்சம் என்பதற்கு சந்திரசேகர் ஆசாத்தின் வாழ்க்கை ஒரு சான்றாக விளங்குகிறது என்று கூறியுள்ளார். தாய்நாட்டிற்காக அவர் செய்த தியாகம், நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் சமஸ்கிருத நீதி மொழியைப் பகிர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மூன்று உலகங்களிலும் வீரத்தை விட மேலான அம்சம் வேறெதுவும் இல்லை. வீரம் என்பது உலகத்தைப் பேணி வளர்த்துப் பாதுகாக்கும் அடிப்படைச் சக்தியாகும். உலகில் கண்ணியம், செழிப்பு, கடமை ஆகிய அனைத்தும் வீரர்களின் வீரத்தில் மட்டுமே நிலைபெற்றுள்ளன."
***
(Release ID: 2233363)
SS/PLM/RJ/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2306456)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam