உள்துறை அமைச்சகம்
ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 12:05PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா, ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாத்மா அய்யன்காளியின் பிறந்த தினத்தையொட்டி திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆன்மீகத்தின் வாயிலாக நற்பண்பு, நீதிநெறி, இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான வழிவகைகளை ஸ்ரீ நாராயண குருஜி போதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அறிவு, கருணை, சமத்துவம், ஆன்மீக சுதந்திரம் தொடர்பான அவரது கொள்கைகள், இந்தியா மீதான பெருமையை உணர்த்துவதுடன் பெரும் உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பணிவான மரியாதையைச் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
மற்றொரு சமூக வலைதள பதிவில் மகாத்மா அய்யன்காளியின் பிறந்த தினத்தில் அவருக்கு தலைவணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் கல்விச் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் சமூக மாற்றத்திற்கு வழிவகுத்த முன்னோடியாகவும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் திகழ்ந்ததாக அமைச்சர் கூறியுள்ளார். சமூக நீதி, சமத்துவ மாண்புகளைப் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த வலுவான அடித்தளத்தை அவர் அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரது மாண்புகள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2304067)
SS/SV/PS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304261)
வருகையாளர் எண்ணிக்கை : 8