உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கான்பூரில் உள்ள கங்கை தடுப்பணை அருகே டெக்னாம் பி2006டி இரட்டை இன்ஜின் விமானம் விபத்துக்குள்ளானது

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 2:08PM by PIB Chennai

கான்பூரைச் சேர்ந்த மெஸ்ஸர்ஸ் கார்க் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும், விடி-என்பிவி என்ற பதிவு எண் கொண்ட டெக்னாம் பி2006டி இரட்டை இன்ஜின் விமானம் ஒன்று, இன்று (27 ஆகஸ்ட் 2026) பிற்பகலில், கான்பூர் சிவில் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில், கங்கா தடுப்பணைக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

கான்பூர் சிவில் விமான நிலைய உள்ளூர் பறக்கும் பகுதியில் அந்த விமானம் ஒரு பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அதில் பயிற்சி விமானி, பயிற்றுவிப்பாளர் என இரண்டு பேர் இருந்தனர். அந்த விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

விமான விபத்து விசாரணைப் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த விசாரணையின் மூலம் விபத்தின் சூழ்நிலைகளும் காரணமும் கண்டறியப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303703&reg=3&lang=1

(Release ID : 2303703)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303986) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Telugu , Kannada