பிரதமர் அலுவலகம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
22 APR 2026 11:07AM by PIB Chennai
கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த பிரதமர், அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த துக்கத்தின் வேளையில் அவர்களின் குடும்பங்களுக்குத் துணையாக நிற்கும் நாட்டின் நிலையான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய மக்கள் துக்கத்திலும், அசைக்க முடியாத உறுதியிலும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார். நாடு எந்தவொரு பயங்கரவாதத்திற்கும் ஒருபோதும் தலைவணங்காது என்றும், பயங்கரவாதிகளின் கொடூரமான சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தங்கள் உயிரை இழந்த அப்பாவி மக்களை நினைவு கூர்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். இந்த இழப்பைச் சமாளித்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் உள்ளன.
ஒரு தேசமாக, நாம் துக்கத்திலும் உறுதியிலும் ஒற்றுமையாக நிற்கிறோம். இந்தியா எந்தவொரு பயங்கரவாதத்திற்கும் ஒருபோதும் தலைவணங்காது. பயங்கரவாதிகளின் கொடூரமான சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது’’.
***
(Release ID: 2254375)
SS/IR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2303796)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam