பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புகழ்பெற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான பல்பிர் புஞ்ச் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2026 12:08AM by PIB Chennai

தலைசிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளரும், அறிவுஜீவியுமான திரு பல்பிர் புஞ்ச் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பல்பிர் புஞ்ச், ஊடக உலகிற்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய ஒரு தலைசிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவுஜீவி என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவரது எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்டன எனவும் அவை தேசிய மறுமலர்ச்சியின் மீதான அவரது ஆழ்ந்த ஆர்வத்தைப் பிரதிபலித்தன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பல்பிர் புஞ்ச்-சின் நாடாளுமன்ற உரைகள் உண்மைகளும் கோட்பாடுகளும் நிறைந்தவையாக இருந்தன என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பல்பிர் புஞ்ச், ஒரு தலைசிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் மற்றும் அறிவுஜீவி ஆவார். அவர் ஊடக உலகிற்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். தேசிய மறுமலர்ச்சியின் மீதான அவரது ஆழ்ந்த ஆர்வத்தைப் பிரதிபலிக்கும், அவரது எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்டன. அவரது நாடாளுமன்ற உரைகள் உண்மைகளும் கோட்பாடுகளும் நிறைந்தவையாக இருந்தன.

 பல்பிர் புஞ்ச், குறிப்பாக மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோரிடையே பாஜகவை வலுப்படுத்த அயராது உழைத்தார். அவர் குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பிஜேபி பொறுப்பாளராக இருந்தார். அக்காலத்தில் அவருடனான எனது உரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரது மறைவால் வேதனை அடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

******

(Release ID: 2253436)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303651) வருகையாளர் எண்ணிக்கை : 17