குடியரசுத் தலைவர் செயலகம்
மீலாதுன் நபி நாளையொட்டி, குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 6:16PM by PIB Chennai
மீலாதுன் நபி நாளையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு தாம் வெளியிட்டுள்ள செய்தியில்:-
“மீலாதுன் நபி என்னும் இந்தப் புனிதமிக்க நாளில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீலாதுன் நபி பண்டிகையானது, நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவு கூறும் தருணம் ஆகும். அறநெறி, கடமை உணர்வு ஆகிய பாதையை பின்பற்றுவதற்கு அவரது போதனைகள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, வளர்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, விரைந்து பங்களிக்க நபிகள் நாயகத்தின் உன்னதமிக்க கொள்கைகள் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும்.”
(Release ID: 2303203)
****
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303356)
வருகையாளர் எண்ணிக்கை : 19