மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ரூ.62,500 கோடி மதிப்பிலான செல்பேசி உற்பத்தித் திட்டம்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 7:14PM by PIB Chennai
ரூ.62,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய 'செல்பேசி உற்பத்தித் திட்டத்தை' மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், உற்பத்தி அளவை மேலும் மேம்படுத்துவதன் மூலமும், அதிக உள்நாட்டு மதிப்புக் கூட்டல் மூலம் உற்பத்தி விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்தி உலகளாவிய போட்டித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், தொழில்நுட்பத் தன்னாட்சியை அடைவதிலும், அதிகப் பொருளாதார மதிப்பை ஈட்டுவதிலும், வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த இந்தியக் காப்புரிமைகளை ஊக்குவிப்பதிலும் உள்நாட்டுச் செல்பேசி நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும்.
இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்பேசி பிராண்டுகள், அறிவுசார் சொத்துரிமை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இச்செல்பேசி உற்பத்தித் திட்டம் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். உண்மையான இந்திய உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வடிவமைப்பு, அறிவுசார் சொத்துரிமை மற்றும் பிராண்ட் ஆகியவை இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகவும், அந்தந்தச் சந்தைப் பிரிவில் உள்ள சிறந்த உலகளாவிய தயாரிப்புகளுடன் போட்டியிடும் திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். அறிவுசார் சொத்துரிமை இந்தியர்களுக்குச் சொந்தமானதா என்பதை உறுதிப்படுத்த அரசு துல்லியமான மதிப்பீட்டை மேற்கொள்ளும் என்றும், அதேவேளையில், இத்துறையினருடன் கலந்தாலோசித்து நிதிசாரா மற்றும் பிற ஆதரவு நடவடிக்கைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302098®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2302182)
आगंतुक पटल : 14