உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றக் கிளையை அமைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2026 7:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் புதிய கிளையை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்றுள்ளார்.

​இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, லடாக்கில் அமையவுள்ள உயர்நீதிமன்றக் கிளை மூலம் அப்பகுதியின் தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எளிதில் நீதி பெறுவது சாத்தியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களுக்குத் தேவையான சட்டம் சார்ந்த சேவைகளைப் பெறுவதில் இருந்துவந்த காலதாமதம் இதனால் வெகுவாகக் குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அங்குள்ள மக்களுக்கான அரசியலமைப்புச் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதிசெய்வதில் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக திரு அமித் ஷா அதில் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301695&reg=3&lang=1

****

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2301801) வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam