வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிங்கப்பூரில் ஆகஸ்ட் 19 முதல் 21 வரை பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2026 10:18AM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிங்கப்பூரில் 2026 ஆகஸ்ட் 19 முதல் 21 வரை பயணம் மேற்கொள்கிறார்.  இந்தியா-சிங்கப்பூர் இடையே பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 70 உயர்நிலை வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவும் திரு பியூஷ் கோயலுடன் சிங்கப்பூர் செல்கிறது.  இக்குழுவில், தொழில்நுட்பம், மென்பொருள், செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி, பொறியியல், உள்கட்டமைப்பு, நிதி சேவைகள், ஃபின்டெக், சுகாதாரப் பராமரிப்பு, உயிர் அறிவியல், உணவு, வேளாண்மை, கடல்சார், வர்த்தகம், தொழில்துறை சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, இரு நாட்டு வர்த்தகங்களுக்கு இடையேயான பேச்சுகள், அரசு-வர்த்தகம் இடையேயான பேச்சுகள் போன்றவற்றில் ஈடுபடவுள்ளன.  இவற்றில், சிங்கப்பூரில் உள்ள முன்னணி திறன் மேம்பாட்டு மையப் பிரதிநிதிகளுடன் உரையாடவுள்ளனர்.  அங்குள்ள திறன் பயிற்சி நிறுவனங்களுக்கும் செல்லவுள்ளனர்.  அப்போது கூட்டாண்மை, முதலீடு, சந்தை அணுகல், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  இந்தியா-சிங்கப்பூர் அமைச்சகங்கள் நிலையிலான வட்டமேசை, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக வட்டமேசை கூட்டங்களின் ஒரு பகுதியாக இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பயணத்தின்போது 2026 ஆகஸ்ட் 20 அன்று நடைபெறவுள்ள 4-வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சகங்கள் நிலையிலான வட்டமேசை கூட்டத்தில் திரு பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.  இக்கூட்டம் இந்தியா-சிங்கப்பூர் இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உயர்ந்த அமைச்சகங்கள் நிலையிலானவையாகும்.  இந்த வட்டமேசைக் கூட்டம் 4-வது இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக வட்டமேசை கூட்டத்திற்கு இடையே நடத்தப்படவுள்ளது.  அதைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

இந்த வட்டமேசைக் கூட்டத்தில் மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.  அமைச்சர்கள், சம்மந்தப்பட்ட இலாக்காவைச் சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர்கள், சிங்கப்பூர் மூத்த தலைவர்கள் ஆகியோர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301050&reg=3&lang=1

***

SS/IR/SU/KR    


(வெளியீட்டு அடையாள எண்: 2301231) வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Gujarati , Telugu