தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, அஞ்சல் துறையின் சார்பில் ட்ரோன் மூலம் மூவண்ணக் கொடி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
14 AUG 2026 7:46PM by PIB Chennai
தேசபக்தி, பொதுச் சேவை, தொழில்நுட்பப் புதுமை ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு தனித்துவமான நிகழ்வாக, அஞ்சல் துறை இன்று (14.08.2026) இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து ரெஹர்தர் கிளை அஞ்சல் அலுவலகத்திற்கு, ட்ரோன் மூலம் தேசியக் கொடியான மூவண்ணக் கொடியை வழங்கியது. இதன் மூலம், இந்திய அஞ்சல் துறையால் மூவண்ணக் கொடி ட்ரோன் மூலம் வழங்கப்படும் முதல் நிகழ்வாக இது அமைந்தது.
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா இந்த முன்முயற்சியை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மண்டி தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து ட்ரோன் நேரடியாகப் புறப்படுவதைக் கண்ட மத்திய அமைச்சர், அஞ்சல் துறை அதிகாரிகள், ட்ரோன் இயக்குபவருடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, அந்த ட்ரோன் ரெஹர்தார் கிளை அஞ்சல் அலுவலகத்தில் தரையிறங்கியது. அங்கு, மூவண்ணக் கொடி அடங்கிய பார்சலை அஞ்சல் குழுவினர் பெற்றுக்கொண்டு, அதனை ஒரு முன்னாள் ராணுவ வீரரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இது அந்த நிகழ்வுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவமாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299570®=3&lang=1
(Release ID : 2299570)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2299706)
आगंतुक पटल : 6