PIB Backgrounder
இந்தியாவின் விண்வெளித்துறை இறையாண்மையை வலுப்படுத்துதல்: புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல்
प्रविष्टि तिथि:
14 AUG 2026 4:13PM by PIB Chennai
இந்தியாவின் விண்வெளிப் பயணம் அடிப்படைத் திறன்களை உருவாக்குவதில் தொடங்கி இன்று மேம்பட்ட, உலகளவில் போட்டியிடக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 19-ம் நூற்றாண்டின் சீர்திருத்தங்கள் விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், உலகளாவிய கூட்டாண்மைகளுக்குத் திறந்துவிட்டுள்ளன. ஏவுதளங்கள், செயற்கைக்கோள்கள், விண்வெளிப் பயன்பாடுகள், மனிதனின் விண்வெளிப் பயணம் என இந்தியாவின் திறன்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன. இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், நாட்டின் விண்வெளி இலக்குகள் எதிர்காலத்தை வடிவமைக்கும் தன்னிறைவு பெற்ற தேசத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன.
இந்தியாவின் விண்வெளிச் சூழல் அமைப்பு வேகமாக விரிவடைந்து வருவதால், பதிவு செய்யப்பட்ட விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-ல் 1 நிறுவனத்திலிருந்து 2026 ஆகஸ்ட் நிலவரப்படி சுமார் 440 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டியுள்ளதுடன், வரும் தசாப்தத்தில் இது 40 முதல் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளித் துறையில் தனியார் முதலீடுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் நேரடி அந்நிய முதலீட்டு விதிகளில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் தனியார் துறையின் ஈடுபாட்டை மேலும் அதிகரித்துள்ளன.
விண்வெளிப் போக்குவரத்துத் துறையில் இந்தியா தற்சார்பு அடையும் வகையில் PSLV, GSLV, GSLV Mk-III, SSLV ஆகிய நான்கு உள்நாட்டு ஏவுகணைகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. விண்வெளித் துறையில் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளங்களும், தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமும் அமைக்கப்பட்டு வருகின்றன. நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி சாதனை படைத்த சந்திரயான்-3 இந்தியாவின் வரலாற்றுச் சாதனையாகும். மேலும் நிலவின் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவரும் சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்லன திட்டமிடப்பட்டுள்ளன. மங்கல்யான், ஆதித்யா-எல் 1, எக்ஸ்போசாட் போன்ற விண்வெளி மற்றும் சூரியனை ஆராயும் திட்டங்கள் இந்தியாவின் அறிவியல் செயல்திறனை உலகிற்கு உணர்த்தியுள்ளன.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான இந்திய விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மறுபயன்பாட்டு ஏவுகணைகள், செமி கிரையோஜெனிக் இயந்திரங்கள், செங்குத்து இறக்கம் மற்றும் தரையிறக்கம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. அரசின் தொலைநோக்குத் திட்டங்களும் விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும் இந்தியாவை உலகளாவிய விண்வெளி வல்லரசாக மாற்றுவதில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299421®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2299684)
आगंतुक पटल : 5