குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி செங்கோட்டையில் நடைபெறும் நாட்டின் 80-வது சுதந்திர விழாவைக் காண சிறப்பு விருந்திரனர்களாகப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளுக்கு அழைப்பு

प्रविष्टि तिथि: 14 AUG 2026 10:45AM by PIB Chennai

தில்லி செங்கோட்டையில் நாளை (15.06.2026) நடைபெறும் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நேரில் காண்பதற்கு தலைநகர் தில்லி, அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகள் 100 பேருக்குச் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தச் சிறப்பு விருந்தினர்களில், பெண் கைவினைக் கலைஞர்கள் உட்பட, பல்வேறு பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டுள்ள கலைஞர்களும் அடங்குவர். இது பெண்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதார நடவடிக்கைகளில் அவர்களின் பெரும் அளவிலான பங்கேற்பு, நாட்டின் வளமான கைவினை, கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்தச் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பாரம்பரியக் கலைகள், கலாச்சாரத்திற்கு அவர்களது அளப்பரியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், இன்று (14.08.2026) தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக அமைப்பின் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இந்தச் சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299286&reg=3&lang=1  

***

SS/SV/GS/KR


(रिलीज़ आईडी: 2299451) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam