சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மனித - யானை மோதல்களைத் தவிர்ப்பதற்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியம் - மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:27PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற உலக யானைகள் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தலைமை தாங்கினார். ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு கொனிடலா பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு கீர்த்தி வர்தன் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு, தொலையுணர்வு, புவிசார் வரைபடம் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பராம்பரிய அறிவுடன் இணைப்பதன் மூலம் யானைகளுக்கு நீடித்த எதிர்காலத்தை உருவாக்க இந்தியா முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். உள்ளூர் சமூகத்தினரின் நலனை உறுதி செய்யும் வேளையில், மனித- யானை மோதல்களைத் தவிர்ப்பதற்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, சமூக பங்கேற்பு, அறிவியல் ரீதியான அணுகுமுறை ஆகியவை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298830®=3&lang=1
***
SS/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299167)
आगंतुक पटल : 7