பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக யானைகள் தினத்தையொட்டி, இந்தியாவின் வலிமையான பாதுகாப்பு முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 1:37PM by PIB Chennai

இந்தியச் சூழலியல் பாரம்பரியத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் கம்பீரமிக்க யானைகளை, உலக யானைகள் தினமான இன்று நாம் கொண்டாடுகிறோம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ஆசிய யானைகளில் 60%-க்கும் மேற்பட்டவை இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

நமது நாட்டிலுள்ள 33 யானைக் காப்பகங்கள், யானைகளுக்கு வாழ்விடங்களை அளிப்பதோடு, அவற்றின் நீண்டகால பாதுகாப்பிற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.  இது போன்ற முயற்சிகளில் முக்கியப் பங்காற்றும் அனைத்து வனத்துறை ஊழியர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், பாகன்கள், உள்ளூர் சமூகத்தினர் குறித்து பெருமிதம் அடைவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“உலக யானைகள் தினத்தன்று, இந்தியச் சூழலியல் பாரம்பரியத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் கம்பீரமிக்க யானைகளை நாம் கொண்டாடுகிறோம். உலகளாவிய ஆசிய யானைகளில் 60%-க்கும் மேற்பட்டவை இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது நாட்டிலுள்ள 33 யானைக் காப்பகங்கள், யானைகளுக்கு வாழ்விடங்களை அளிப்பதோடு அவற்றின் நீண்டகால பாதுகாப்பிற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துகிறது. இது போன்ற முயற்சிகளில் முக்கியப் பங்காற்றும் அனைத்து வனத்துறை ஊழியர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், பாகன்கள், உள்ளூர் சமூகத்தினர் குறித்தும் நாம் பெருமிதம் அடைகிறோம்.”

*** 

(Release ID: 2298113)

SS/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2298510) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam