சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2025-ல் 891-ஆக அதிகரித்தது: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 12:02PM by PIB Chennai
உலக சிங்க தினம் 2026-ஐ முன்னிட்டு சிங்கங்களின் பாதுகாப்பில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தைப் பாராட்டியுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், வன உயிரினங்கள், பல்லுயிர் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் நாட்டின் உறுதிமிக்க அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2015-ல் 523-ஆக இருந்த நிலையில், 2025-ல் 891-ஆக அதிகரித்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சாதனைக்கு வனத்துறை அதிகாரிகள், பாதுகாப்பாளர்கள், உள்ளூர் சமூகத்தினர், மகத்துவமிக்க உயிரினங்களைப் பாதுகாக்க அயராது பாடுபடும் அனைவரது அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் வெற்றி வனஉயிரினம், பல்லுயிர் பெருக்கத்தின் மீது நாட்டின் அர்ப்பணிப்புக்கு ஒரு பெருமைமிகு சான்றாக உள்ளது என்று திரு யாதவ் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இயற்கைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், எதிர்கால சந்ததியினருக்கு ஆசிய சிங்கங்களின் கர்ஜனை தொடர்ந்து ஒலிப்பதை உறுதி செய்வதிலும் உள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியையொட்டி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், முக்கிய வாழ்விடங்களைப் பாதுகாத்தல், பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துதல், இணைந்து வாழக்கூடிய சூழலை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியையும், இயற்கையையும் இணைத்து செழுமை அடைய முடியும் என்று இந்தியா உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296978®=3&lang=1
***
SS/IR/GS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2297068)
வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Malayalam