கூட்டுறவு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்ட, வலுவான சுயவேலைவாய்ப்புச் சூழலை உருவாக்க, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் பங்கு முக்கியமானது - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
08 AUG 2026 6:23PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவு மூலம் வளமை என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், நாட்டின் கூட்டுறவு வங்கிகளை நவீன, வெளிப்படையான, பாதுகாப்பான, போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாக கூட்டுறவுப் புரட்சி என்ற நிகழ்ச்சி இன்று மும்பையில் உள்ள பிஎஸ்இ சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான பாதுகாப்புச் செயல்பாட்டு மையத்தையும், நாடு தழுவிய சேவைத் தொகுப்பின் கீழ், கோர் பேங்கிங், அது சார்ந்த சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி, மேம்பாட்டு கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முன்னதாக, மும்பையின் ஃபோர்ட் பகுதியில் உள்ள 'சாரதா சதன்' கட்டிடத்தில் தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி, மேம்பாட்டுக்கு கழகத்தின் புதிய அலுவலகத்தையும் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம், போதுமான மூலதனம், புதிய அலுவலகத்துடன் நடைமுறைக்கு வந்துள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கும் ஒரு சிறப்பான வரலாற்று முக்கியத்துவம் உண்டு என்று திரு. அமித் ஷா குறிப்பிட்டார். தற்போது இது ஒரு அரங்கமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஏறக்குறைய 100 ஆண்டுகளாக இந்த இடம் இந்திய பங்குச் சந்தையின் மையப்புள்ளியாகத் திகழ்ந்ததுடன், நாட்டின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் மறுசீரமைப்பு, வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பல முன்னணி நிறுவனங்களின் பயணங்களுக்கு, சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் பிஎஸ்இ அமைப்பின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக அரங்கம் சான்றாகத் திகழ்ந்தது என்று அவர் கூறினார். இன்று, அதே வரலாற்றுச் சிறப்புமிக்க இடம், நகர்ப்புற கூட்டுறவு வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றத்திற்கும் சான்றாகத் திகழ்கிறது என்று அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296591®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2296647)
आगंतुक पटल : 8