பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
உலகத் தாய்ப்பால் வாரம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
05 AUG 2026 3:22PM by PIB Chennai
உலகத் தாய்ப்பால் வாரத்தை நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடைப்பிடிக்கிறது. வாழ்க்கையின் நீடித்த தொடக்கத்திற்கு தாய்ப்பால் : பணிகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பின் கீழ் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சுகாதார பராமரிப்பு மையங்கள் சமூகம் சார்ந்த அமைப்புகள் மின்னணு ஊடகங்கள் ஆகியவை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இந்த இயக்கம், ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இக்காலக்கட்டம் என்பது கர்ப்ப காலம், பிறப்புக்கு பிந்தைய முதல் 6 மாதங்கள் மற்றும் 24 மாத வயது வரையிலான காலத்தை கொண்டதாகும். இக்காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து பராமரிப்பு, அன்பு ஆகியவை அக்குழந்தையின் மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி, வளர்ச்சி, கற்கும் திறன், வாழ்நாள் முழுமைக்குமான நலவாழ்வு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294806®=3&lang=1
****
TV/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2295156)
आगंतुक पटल : 6