குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2026 3:02PM by PIB Chennai

உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் திரு சைதோவ் ஒடிலோவிச் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு ஒடிலோவிச்சையும் அவரது பிரதிநிதிகளையும் வரவேற்ற குடியரசுத் தலைவர் இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் பழங்கால வர்த்தக உறவுகள், வரலாற்று,  கலாச்சார, நாகரீகத் தொடர்புகளைப் பகிர்ந்துக் கொள்வதாகத் தெரிவித்தார். கட்டிடக் கலை, மொழி, உணவு, இசை, மத மரபுகள் ஆகியவற்றில் உள்ள பகிரப்பட்ட பாரம்பரியம் இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உஸ்பெகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவில் உயர்மட்டத் தலைவர்கள் இடம் பெற்றிருப்பதும், இந்தியா-உஸ்பெகிஸ்தான் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் இருதரப்பு வர்த்தகங்களின் சந்தை மீது மற்றொரு நாட்டின் வளர்ந்து வரும் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293746&reg=3&lang=1        

***

TV/IR/SM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2294033) வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam