வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 2:11PM by PIB Chennai

முதலீடு, உற்பத்தி, புத்தாக்கம் போன்ற துறைகளில், முதலீடு செய்ய முன்வருமாறு, இந்தியா - உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் வர்த்தக மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், அடுத்த மூன்று ஆண்டுகளில், இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் வகையில், ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, வளம் சார்ந்த பொதுவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உத்திசார் ஒத்துழைப்புவர்த்தகம், முதலீடு, பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இரு நாடுகளைச் சேர்ந்த  பிரதிநிதிகளை வரவேற்ற திரு. பியூஷ் கோயல், இந்தியா - உஸ்பெகிஸ்தான் நாடுகள் வளமான வரலாற்றுத் தொடர்பு, வலுவான கலாச்சார நட்புறவைக் கொண்டிருப்பதுடன், வர்த்தக வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது என்று கூறினார்.

இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு, இந்தியா  வளர்ந்து வரும் ஒரு பெரிய சந்தையாக இருப்பதுடன், நம்பகத்தன்மை கொண்ட நட்பு நாடாகவும், திறமையான இளம் பணியாளர்களுடன், புத்தாக்கம் சார்ந்த வளர்ச்சிக்கான தளத்தையும் வழங்குகிறது என்று திரு பியுஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293710&reg=3&lang=1

***

VJ/PD/SV/SM/KR

 


(रिलीज़ आईडी: 2293860) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Malayalam