பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 AUG 2026 8:43AM by PIB Chennai
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பத்து போட்டிகளிலும் தேஜஸ்வின் சங்கர் ஒரு சிறப்பான முழு அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தினார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமர், அவரது சாதனைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து சரித்திரம் படைத்து, நமது தேசத்திற்குப் பெருமை சேர்க்கிறார்கள்!
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டெகாத்லான் பிரிவில் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 10 போட்டிகளிலும் சிறப்பான, பன்முகத் திறமையுடன் செயல்பட்டார். அவருக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து ஜொலிக்க எனது நல்வாழ்த்துகள்."
***
(Release ID: 2292832)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2292979)
आगंतुक पटल : 7