பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தானேவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 1:08PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக பிரதமர் கூறியுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மகாராஷ்டிராவின் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

 

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.”

***

(Release ID: 2292271)

SS/PLM/RJ/SH


(रिलीज़ आईडी: 2292590) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam