வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அபேடா முயற்சியால் கர்நாடகாவின் நீலம், தோதாபுரி மாம்பழங்கள் மாலத்தீவுக்கு விமானம் மூலம் ஏற்றுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2026 12:15PM by PIB Chennai

மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா, கர்நாடகாவிலிருந்து மாலத்தீவிற்கு நீலம், தோதாபுரி ரக மாம்பழங்களை முதல்முறையாக விமானம் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (2026 ஜூலை 30) கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ஏற்றுமதி, சர்வதேச சந்தைகளில் கர்நாடகாவின் மாம்பழ வகைகளை ஊக்குவிப்பதோடு,  இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்தும்.

தனை அபேடா தலைவர் திரு அபிஷேக் தேவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஏற்றுமதியை சாத்தியமாக்கிய ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார். இதுபோன்ற முயற்சிகள் இந்திய மாம்பழங்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதாகவும், புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், விவசாயிகளின் நிலையான வருமான வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292224&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2292369) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Urdu , Bengali , Telugu , Kannada