பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மிஷன் சக்தி செயலியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி மக்களுக்கு அறிவுறுத்தல்
प्रविष्टि तिथि:
31 JUL 2026 11:20AM by PIB Chennai
பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும் மிஷன் சக்தி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மக்களை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கேட்டுக்கொண்டுள்ளார்.
எளிதில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலி குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, உதவி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டை மிஷன் சக்தி செயலி மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். மகளிர் உதவி எண் 181, அவசர சேவை 112, ஊட்டச்சத்து, பிரதமரின் தாய்மையைப் போற்றுவோம் திட்டம் ஆகியவற்றிற்கான உதவி எண் 1515, தேசிய இணையக் குற்ற உதவி எண் 1930, சட்ட உதவி 15100, டெலி-மானஸ் 14416, குழந்தைகள் உதவி எண் 1098 உள்ளிட்ட முக்கிய உதவி எண் சேவைகளை இந்தச் செயலி ஒரே தளத்தில் விரைவாகவும் எளிதாகவும் அணுகுவதை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மிஷன் சக்தி செயலியைப் பதிவிறக்கம் செய்து, இந்த முக்கிய சேவைகள் குறித்த தகவல்களைத் தங்கள் குடும்பத்தினருடனும், அறிமுகமானவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு திருமதி அன்னபூர்ணா தேவி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292205®=3&lang=1
***
SS/PLM/RJ/SH
(रिलीज़ आईडी: 2292367)
आगंतुक पटल : 12