பிரதமர் அலுவலகம்
வாரணாசியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பங்கேற்று, சுமார் ரூ. 6,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
28 APR 2026 8:38PM by PIB Chennai
வாரணாசியில் நடைபெற்ற மாநாட்டில், திரளான பெண்கள் மத்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
மாநாட்டில் பேசிய திரு மோடி, தேசத்தைக் கட்டமைப்பதில் பெண்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தி, மகளிர் சக்தியை வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலிமையான தூண் என்று வர்ணித்தார். மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் ஒரு முக்கிய தேசிய இலக்கை அடைவதற்கு, அங்கு கூடியிருந்தவர்களின் ஆசிகளை அவர் கோரினார். "உங்கள் இட ஒதுக்கீட்டு உரிமை யதார்த்தமாவதை உறுதி செய்வதில் நான் எந்த எல்லை வரையும் செல்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என திரு மோடி உறுதிபட தெரிவித்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு தான் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் சிறுமிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 'ஷாலா பிரவேஷோத்சவ்' மற்றும் அவர்களின் கல்விக் கட்டணங்களுக்கு உதவுவதற்காக 'முதல்வரின் கன்யா கேலவானி நிதி' ஆகிய இரண்டு முன்னோடித் திட்டங்கள் தொடங்கப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார் . "அப்போதிருந்து இன்றுவரை, எங்கள் அரசின் கொள்கைகளில் பெண்களின் நலனுக்குத் தொடர்ந்து மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட விரிவான நலத்திட்டங்களை விவரித்த பிரதமர், 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டதாகவும், 30 கோடிக்கும் அதிகமான சகோதரிகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், 2.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், 12 கோடிக்கும் அதிகமான வீடுகளை குழாய் நீர் சென்றடைந்ததாகவும் குறிப்பிட்டார். செல்வமகள் சேமிப்புத் திட்டம் , முத்ரா திட்டம், மாத்ரு வந்தனா திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் உட்பட, இந்த முன்முயற்சிகள் சகோதரிகளையும் மகள்களையும் தேசிய வளர்ச்சியின் மையத்தில் இடம்பெறச் செய்தன என்று குறிப்பிட்டார்.
சமீபத்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கவலையை வெளிப்படுத்திய பிரதமர், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வழிவகை செய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களில், பெண்கள் சாதனை அளவில் வாக்களித்துவருவதை சுட்டிக்காட்டி, இந்த நேர்மறை செயல்பாட்டிற்குப் பிரதமர் தமது திருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256385®=3&lang=1
----
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2292348)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam