பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்ரீசங்கருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2026 5:24PM by PIB Chennai

கிளாஸ்கோ காமன்வெல்த் நீளம் தாண்டுதல் போட்டியில் ஆடவர் லீக் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீசங்கருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிறப்பான செயல்திறனை அவர் வெளிப்படுத்தி, பதக்கம் வென்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீசங்கரின் இந்த வெற்றி தடகளப் போட்டிகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்துள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அபாரமான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திய ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது சிறப்பான தருணமாகும். தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது இந்த வெற்றி தடகளப் போட்டிகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.

*

TV/SV/RJ/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2292108) வருகையாளர் எண்ணிக்கை : 38