தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் டிஜிட்டல் தளங்கள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான வணிகம், முதலீடு மற்றும் புத்தாக்க வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்றன
प्रविष्टि तिथि:
29 JUL 2026 3:56PM by PIB Chennai
ஏவிஜிசி-எக்ஸ்ஆர் எனப்படும் இயங்குபடம், காட்சிப்படுத்துதல், விளையாட்டு, சித்திரக் கதைகள் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்காக வேவ்ஸ் பஜார் மற்றும் வேவ்எக்ஸ் என இரண்டு டிஜிட்டல் தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நிறுவியுள்ளது.
வேவ்ஸ் பஜார், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு ஆண்டு முழுவதும் செயல்படும் ஒரு உலகளாவிய சந்தை மற்றும் ஈடுபாட்டுத் தளமாகச் செயல்படுகிறது. இது திரைப்படங்கள், அனிமேஷன், விஎஃப்எக்ஸ், கேமிங், எக்ஸ்ஆர், இம்மெர்சிவ் மீடியா, இசை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகிய துறைகளில் கட்டமைக்கப்பட்ட வணிகக் கண்டறிதல், வணிகங்களுக்கு இடையேயான சந்திப்புகள், சந்தை அணுகல், முதலீட்டு வசதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை எளிதாக்குகிறது.
வேவ் எக்ஸ், முதலீட்டாளர் இணைப்பு முயற்சிகள் மற்றும் கூட்டாளிகள் மற்றும் தொழில் பாதுகாப்பகங்களின் வலையமைப்பு மூலம் நிதியுதவிக்கான அணுகலை எளிதாக்குவதன் மூலம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு பிரத்யேக ஸ்டார்ட்அப் தளமாகச் செயல்படுகிறது.
ஏவிஜிசி-எக்ஸ்ஆர்-க்கான தேசிய சிறப்பு மையமாக இந்திய படைப்பக தொழில்நுட்ப நிறுவனத்தை (ஐஐசிடி) அரசு நிறுவியுள்ளது. மகாராஷ்டிர அரசு மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஐஐசிடி இணைந்து செயல்படுகிறது.
இந்தத் தகவலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291064®=3&lang=1
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2291437)
आगंतुक पटल : 7