பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொதுத் தேர்வுகள் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிரான சட்டப்பூர்வ கட்டமைப்பை பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா மேலும் வலுவடையச் செய்யும் - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
28 JUL 2026 5:58PM by PIB Chennai
பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா, 2026 என்பது, தேர்வு தொடர்பான முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், சட்டப்பூர்வக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில், மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை இந்தச் சட்டம் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், நாட்டின் இளைஞர்களின் குறிக்கோள்களை எந்த வகையிலும் குந்தகம் விளைவிக்க அனுமதிக்கக் கூடாது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவும் உள்ளது என்று அவர் கூறினார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தேர்வு முறையின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துவதில் இந்தச் சட்டத் திருத்த மசோதா ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த அமைச்சர், முறைகேடான வழிமுறைகளை நாடும் நபர்களுக்கான தண்டனை காலம் 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதிலிருந்து, 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக அதிகரிக்கவும், அதிகபட்ச அபராதம் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் சேவை வழங்குநர்களுக்கான அதிகபட்ச அபராதம் ரூ 1 கோடியிலிருந்து ரூ 5 கோடியாகவும், பொதுத் தேர்வுகளை நடத்துவதிலிருந்து அவர்கள் தடை செய்யப்படும் காலம் நான்கு ஆண்டுகளிலிருந்து எட்டு ஆண்டுகளாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கான தண்டனையை 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையிலிருந்து 7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையாகவும், அதிகபட்ச அபராதத்தை ரூ 1 கோடியிலிருந்து ரூ 10 கோடியாகவும் அதிகரிக்கவும் இந்த வரைவு சட்டத் திருத்த மசோதா வகை செய்கிறது.
இந்த சட்டத் திருத்த மசோதா தேர்வு தொடர்பான திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்றும், விரைவான நீதியை உறுதி செய்யும் என்றும், நாட்டின் பொதுத் தேர்வு முறையின் நேர்மை, வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும்டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290606®=3&lang=1
(Release ID: 2290606)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2290812)
आगंतुक पटल : 8