ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென் மத்திய ரயில்வேயின் நாந்தெட் பிரிவில் உள்ள பர்பானி-முட்கெட் வழித்தடத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 1:39PM by PIB Chennai

ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை    வலுப்படுத்துவது, வழித்தடங்களை அதிகரிப்பது போன்றவற்றில் ஒரு முக்கியதத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக, தென் மத்திய ரயில்வேயின் நாந்தெட் பிரிவில் உள்ள பர்பானி-முட்கெட் இரட்டை வழித்தடத்தில், மின் இழுவை அமைப்பை மேம்படுத்த ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய மின் விநியோக நிறுவல் பணிகளையும் உள்ளடக்கிய இத்திட்டம், ரூ. 163 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தற்போதுள்ள 1x25 கேவி திறன் கொண்ட மின் இழுவை அமைப்பு, மேம்பட்ட 2x25 கேவி இரட்டிப்பாக மேம்படுத்தப்படவுள்ளது. 164 கிலோமீட்டர் தொலைவிற்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்தப் பணிகள், அதிகரிக்கப்பட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மேம்படுத்தப்பட்ட மின் விநியோக உள்கட்டமைப்பும் அமைக்கப்படும்.

பர்பானி-முட்கெட் வழித்தடம், அஜ்மீர்-இந்தூர்-கண்ட்வா-அகோலா-பூர்ணா-முட்கெட்-செகந்திராபாத்-மஹபூப்நகர்-தோனே ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கும், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த அதிக பயன்பாடுள்ள வழித்தடம் 9-ன் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட இந்த மின் இழுவை அமைப்பு, ரயில் இயக்கத்திற்கான மின் விநியோகத்தை வலுப்படுத்தும். இதன் மூலம், இந்த வழித்தடத்தில், அதிக சரக்கு போக்குவரத்துக்கான ரயில்களைக் கையாளவும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ஏதுவாகவும் இந்த அமைப்பு இருக்கும். மேலும், 2029-30-ம் ஆண்டிற்குள் 3,000 மில்லியன் டன் அளவிலான சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ரயில்வேயின் இலக்கை அடைவதற்கும் இது உதவிடும்.

நாடு முழுவதும் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள ரயில் வழித்தடங்களில், மின் உள்கட்டமைப்பு வசதிகளை  நவீனமயமாக்கவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், ரயில்வே மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை இத்திட்டம் பிரதிபலிப்பதாக உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290300&reg=3&lang=1

 

***

TV/SV/KR

 


(रिलीज़ आईडी: 2290372) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada