உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த 3-வது பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:37PM by PIB Chennai

இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டத்தை 2026 ஜூலை 24 அன்று புதுதில்லியில் வெற்றிகரமாக நடத்தியது. இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தலைமை வகித்தார். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், தூதுக்குழுத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மேம்பட்ட ஒத்துழைப்பு, புதுமை, நிலையான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் பேரிடர் தாங்கும் திறனை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான பிரிக்ஸ் ஒத்துழைப்பின் பரிணாம வளர்ச்சியில் இந்தக் கூட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதுடன், பிரிக்ஸ் பேரிடர் குறைப்புக்கான கூட்டு அறிக்கையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதன் மூலம் நிறைவடைந்தது.

அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திரு நித்யானந்த் ராய்பேரிடர் அபாயக் குறைப்பில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் பேரிடர் அபாயக் குறைப்புக்கான பத்து அம்ச செயல்திட்டத்தால் இந்தியா வழிநடத்தப்படுகிறது என்று அவர் கூறினார். பிரிக்ஸ் பேரிடர் அபாயக் குறைப்புப் செயல்திட்டத்தை (2025–2028) விரைவுபடுத்துவதற்காக, இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஐந்து உத்திசார் முன்னுரிமைகளை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288986&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2289353) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam