தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தொலைக்காட்சி பார்வையாளர் அளவீட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் புதிய தரமதிப்பீட்டுக் கொள்கை
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2026 3:50PM by PIB Chennai
நாட்டில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மதிப்பீட்டை ஒழுங்குப்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வகுக்கும் வகையில் தொலைக்காட்சி மதிப்பீட்டுக் கொள்கை 2026-ஐ (டிஆர்பி) தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது முந்தைய 2014-ம் ஆண்டு வழிகாட்டுதல்களுக்குப் பதிலாக புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியச் சீர்த்திருத்தங்கள் சில:
நிகர சொத்துமதிப்புக்கான தகுதி அளவுகோல் 20 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அளவீட்டுக் கருவி பொருத்தப்படும் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாதிரி அளவு அதிகரிக்கப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படும்.
வருடாந்தர தணிக்கை
இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம், புதிய கொள்கையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். தற்போதைய நிலவரப்படி புதிய கொள்கையின் கீழ் எந்த நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288841®=3&lang=1
***
SS/PLM/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2289131)
வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam