பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறிவியல் சரிபார்ப்பு அடிப்படையில் இ20 பெட்ரோலின் பாதுகாப்பையும் செயல்திறனையும் அரசு மீண்டும் உறுதிசெய்துள்ளது

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:05PM by PIB Chennai

எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டமானதுநித்தி ஆயோக்வாகன உற்பத்தியாளர்கள்எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள்இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம்இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம்இந்திய பெட்ரோலிய நிறுவனம் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிகட்டம் கட்டமாகஅறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டகலந்தாய்வு நடைமுறை மூலமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

20 பெட்ரோலின் பயன்பாடு தொடர்பாகஎரிபொருள் சிக்கனம்எந்திரச் செயல்திறன்பராமரிப்பு செலவுகள்ஒட்டுமொத்த ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றின் மீது வாகன உற்பத்தியாளர்கள்வாகன சங்கங்கள் அல்லது நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து பரவலான அல்லது ஆதாரப்பூர்வமான புகார்கள் எதுவும் அரசுக்கு வரவில்லை. இருப்பினும்ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் எழுப்பப்பட்ட சில கவலைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அவை அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டுள்ளன.

பழைய வாகனங்களில் இ20 எரிபொருளால் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாறுபாடோஅசாதாரண தேய்மானமோ ஏற்படுவதில்லை என்பதையும் விரிவான சோதனைக்கூட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விரிவான சோதனைக்கூட ஆய்வுகள்கள சரிபார்ப்புநிஜ உலக இயக்க அனுபவம் ஆகியவை20 எரிபொருளால் வாகனத்தின் செயல்திறனில் பாதகமான தாக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நிரூபித்துள்ளன.

அரசின் மதிப்பீடுசோதனைக்கூட ஆராய்ச்சியை மட்டுமின்றிநாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு சுரேஷ் கோபிஇன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288269&reg=3&lang=1

***

SS/SMB/SH

 


(रिलीज़ आईडी: 2288685) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu