சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவின் பிரிக்ஸ் 2026 தலைமைத்துவத்தின் கீழ், 16-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:02PM by PIB Chennai
இந்தியாவின் பிரிக்ஸ் 2026 தலைமைத்துவத்தின் கீழ் சண்டிகரில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் இன்று (23.07.2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது. பொது சுகாதார முன்னுரிமைகளை நிவர்த்தி செய்வதிலும், மீள்திறன் கொண்ட உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், தூதுக்குழுத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள், பொது சுகாதார வல்லுநர்கள் இதில் பங்கேற்றனர்
பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கருப்பொருளான "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்பதன் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டம், முக்கிய சுகாதார சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும், நீடித்த ஒத்துழைப்பின் மூலம் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல், பெருந்தொற்றுத் தயார்நிலையை மேம்படுத்துதல், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கான தங்களின் கூட்டு உறுதிப்பாட்டை உறுப்பு நாடுகள் மீண்டும் வலியுறுத்துவதற்கும் ஒரு தளத்தை வழங்கியது.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒரு தளமாக பிரிக்ஸின் நீடித்த வலிமையை உறுப்பு நாடுகளின் தீவிரப் பங்கேற்பு பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் பிரிக்ஸ் அமைப்பின் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைத்த திரு நட்டா, இந்த அமைப்பு உலகளாவிய தெற்கின் குரலாகவும், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான உலக ஒழுங்கை வடிவமைப்பதில் பெருகிவரும் செல்வாக்குமிக்க தளமாகவும் உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். தொற்று நோய்கள், தொற்றா நோய்களின் அதிகரித்து வரும் சுமை, பருவநிலை தொடர்பான சுகாதார அபாயங்கள், விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆழமான பலதரப்பு ஒத்துழைப்பும் வலுவான நிறுவனக் கூட்டாண்மைகளும் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288267®=3&lang=1
***
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2288684)
आगंतुक पटल : 6