பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எத்தனால் கலந்த பெட்ரோலின் பாதுகாப்பையும், செயல்திறனையும், தேசியப் பலன்களையும் அரசு எடுத்துரைத்துள்ளது

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:06PM by PIB Chennai

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை 20%-க்கு மேல் அதிகரிப்பது குறித்து இதுவரை அரசால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் கலந்தாலோசனைகளுக்குப் பிறகே அதிக எத்தனால் கலவைகள் தொடர்பான எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும். இருப்பினும், 85 எரிபொருள் (85% எத்தனால்,15% பெட்ரோல் கொண்டது)அத்தகைய எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட எஃப் எஃப் வாகனங்களில்  பிரத்தியேகமாகப் பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, பெட்ரோலில் எத்தனால் கலப்பதற்கான நாடு தழுவிய அடிப்படை அளவை அதிகரிப்பதாக அமையாது.

தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள எத்தனால் கலப்பு சதவிகிதம் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுவாரியாக அடையப்பட்ட சராசரி கலப்பு ஆகியவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2022-23, 12%

2023-24, 14.6%

2024-25, 19.2%

2025 நவம்பர் முதல் 2026 ஜூன் வரை 20%

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான படிப்படியான கொள்கை உருவாக்கம், பங்குதாரர் ஆலோசனைகள், அறிவியல் மதிப்பீடு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் விளைவாக, இந்தியா தனது அசல் இலக்கிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைந்துள்ளது.

20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான பெட்ரோல் கார்களும், எத்தனால் கலப்பதால் பரவலான எந்திரக் கோளாறு அல்லது வாகனப் பழுது ஏற்பட்டதற்கான சரிபார்க்கப்பட்ட சான்றுகள் ஏதுமின்றி இந்தக் கலவைகளில் இயங்கி வருகின்றன. இது பெரிய அளவிலான நிஜ உலக அனுபவத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இ20 எரிபொருளால் அசாதாரண அரிப்பு, தேய்மானம் அல்லது வாகன ஆயுள் குறைவு எதுவும் இல்லை என்பதை உற்பத்தியாளரின் சேவைத் தரவுகள் உறுதிசெய்கின்றன.இ20 எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான உத்தரவாதக் கடமைகளை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர், இது அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையில் மேலும் நம்பிக்கையை அளிக்கிறது.

செயல்திறன் சிக்கல்கள் ஏதுமின்றி அனைத்து பெட்ரோல் வாகனங்களுடனும் இ20 எரிபொருளின் தொழில்நுட்பப் பொருத்தம் குறித்தும், எத்தனால் கலப்பின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு நன்மைகள் குறித்தும் நுகர்வோருக்குக் கல்வி புகட்டுவதற்காகப் பொது விழிப்புணர்வு முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறைதீர்ப்பு வழிமுறைகள் மூலம் பெறப்படும் நுகர்வோர் கருத்துகள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மேலும், எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், நுகர்வோர் நம்பிக்கையை உறுதி செய்வதற்காகத் தேவைப்படும் இடங்களில் பொருத்தமான திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288271&reg=3&lang=1

 

 

***

TV/SMB/KR

 


(रिलीज़ आईडी: 2288427) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam