பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 8:22AM by PIB Chennai

சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.  சந்திர சேகர் ஆசாதின் அச்சமற்ற துணிச்சலும், அசைக்க முடியாத தேசபக்தியும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு தங்களை அர்ப்பணிக்க எண்ணற்ற இந்திய இளைஞர்களை அவர் ஊக்குவித்தார் என்றும் அவருடைய உறுதிப்பாடு பல தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“துணிச்சல்மிக்க சந்திர சேகர் ஆசாதின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவருடைய அச்சமற்ற துணிச்சலும், அசைக்க முடியாத தேசபக்தியும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டிற்கு தங்களை அர்ப்பணிக்க எண்ணற்ற இந்திய இளைஞர்களை அவர் ஊக்குவித்தார். அவருடைய உறுதிப்பாடு பல தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

------

(Release ID: 2288115)

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2288321) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam